கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில் ‘சபாஷ் நாயுடு’
உலக நாயகன் கமல்ஹாசன், மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ள முதல் படத்தின் தொடக்கவிழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், லைகா சேர்மன் சுபாஷ்கரன், நாசர், விஷால், கார்த்தி, இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கமல் தனது படத்தின் டைட்டிலை அறிவித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ‘சபாஷ் நாயுடு’, என்ற டைட்டிலும், இந்தியில் ‘சபாஷ் குண்டு’ என்ற டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் மகளாக ஸ்ருதிஹாசனும், மனைவியாக ரம்யாகிருஷ்ணனும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் காமெடி கேரக்டரில் பிரமானன்ந்தம் நடிக்கவுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ராஜீவ்குமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. வரும் மே 14ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் ஜூலையில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். கமல்ஹாசன் இந்த படத்தில் பல்ராம் நாயுடு என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.