ஐபிஎல் கிரிக்கெட்: தோனி அணியை வீழ்த்தியது கோஹ்லி அணி
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான புனே அணியை விராத் கோஹ்லியின் தலைமையிலான பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற தோனி பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் விராத் கோஹ்லி அதிரடி ஆட்டத்தின் மூலம் 80 ரன்களும், மற்றொரு வீரரான டிவில்லியர்ஸ் 83 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தோனியின் புனே அணி, அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ரஹானே 60 ரன்களும் தோனி 41 ரன்களும் எடுத்தனர். இந்த அணியின் 4 வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.