சுவாதியை அடித்தது ராம்குமார் இல்லையா? திசை திரும்புகிறது சுவாதி வழக்கு?
நுங்கம்பாக்கத்தில் கொலையான சுவாதியின் வழக்கை தற்போது போலீசார் முழுவீச்சுடன் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பமாக கொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பு அதே நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் சுவாதியை ஒரு இளைஞர் அடித்ததாக தமிழ்ச்செல்வன் என்பவர் போலீசிடம் கூறியிருந்தார் அல்லவா?
இந்த இளைஞன் ராம்குமார் அல்ல என்றும் தற்போது சொல்கிறாராம். அப்படியானால், சுவாதியை அடித்த அந்த இளைஞன் யார் என்பதுதான் இப்போது போலீஸார் குழப்பம் அடைய காரணமாக உள்ளது.
‘பெங்களூரு கம்பெனியில் சுவாதி சிலகாலம் வேலை பார்த்தார். அப்போது அவருக்குச் சில நண்பர்கள் அறிமுகம் ஆனதாகவும், அதன்பிறகு அவர் அந்த இடம், சூழ்நிலை பிடிக்காமல் சென்னைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் ஒன்றிரண்டு பெங்களூரு நண்பர்கள் சுவாதியை சென்னை வந்து மிரட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக தமிழ்ச்செல்வன் பார்த்த ஆள் பெங்களூரு நபர்களில் ஒருவராக இருக்கலாம் அந்த நபர் சுவாதியை எதற்காக ஒரு பொது இடத்தில் அடிக்க வேண்டும்? அவர் சுவாதியிடம் இருந்து என்ன தகவலைப் பெற முயற்சித்தார்? இந்தப் பின்னணி ஆராயப்பட வேண்டும்’ என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்
இந்நிலையில் இன்று சென்னை புழல் சிறையில் குற்றவாளியை கண்டுபிடிக்க ராம்குமார் உள்பட ஒருசிலரை வைத்து அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பில் ராம்குமார் உறுதி செய்யப்பட்டால் அவர் மீதான் வழக்கு மேலும் வலுவடையும் என போலீசார் கருதுகின்றனர்.