ஞானதேசிகன் உள்பட 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் நீக்கம். பின்னணி என்ன?
முன்னாள் தமிழக தலைமை செயலரும் தற்போதைய தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) தலைவராகவும் செயல்பட்ட ஞானசேகரன் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் ‘எல்காட்’ நிறுவன மேலாண் இயக்குநரும், கனிமவள ஆணையருமான அதுல் ஆனந்தும் சஸ்[எம்ட் செய்யப்பட்டார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற மிகப்பெரிய கனிமவள முறைகேடு சம்பந்தமான நடவடிக்கை எடுக்க இரு அதிகாரிகளும் சரியான ஒத்துழைப்பை வழங்காததால் இந்த அதிரடி நடவடிக்கை என கூறப்படுகிறது.
மேலும், கனிமவளம் தொடர் பான பல்வேறு அனுமதிகளை வழங்கியதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடர்பிருப்பதால் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாகவும், துறைரீதியான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசேகரன் கடந்த 2014ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர். பின்னர் சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியேற்றவுடன் இவர் தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) தலைவராக நியமிக்கப்பட்டார்.