சண்டக்கோழி 2’ படத்தில் இணைந்த சரத்குமார்!
மலையாள நடிகர் சரத்குமார், தற்போது விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி2’ இணைந்து நடித்து வருகிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகிகளாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ஜிமிக்கி கம்மல் படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் சரத் குமார் தற்போது ‘சண்டக்கோழி 2’ வில் இணைந்து நடித்து வருகிறார்.. இவருக்கு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.