நேற்று அறிக்கை, இன்று மீண்டும் பேனர்: சொன்ன சொல்லை காப்பாற்றுமா திமுக?
சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று முன்தினம் அரசியல் கட்சி ஒன்றின் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்திற்கு சென்னை ஐகோர்ட் கடுமையான கண்டனம் தெரிவித்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இனிமேல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் யாரும் பேனர்கள் போஸ்டர்கள் வைக்க வேண்டாம் என்றும், அவ்வாறு பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேனர்கள் வைக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்
இதனை அடுத்து இன்று பெரம்பூர் ரயில்வே கல்யாண மண்டபம் முன்பு திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைத்துள்ளனர். நேற்று மு க ஸ்டாலின் அவர்களும், இன்று உதயநிதி ஸ்டாலினும் பேனர் குறித்த அறிக்கை விட்டிருந்த நிலையில் இந்த அறிக்கைகள் தொண்டர்களுக்கு போய் சேர்வதற்கு முன்னரே மீண்டும் பேனர் கலாச்சாரம் தொடங்கி விட்டதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்
நேற்று விடுத்த அறிக்கையின் படி திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பேனர்கள் வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இன்று பெரம்பூர் ரயில்வே கல்யாண மண்டபம் முன்பு திமுக 3ஆம் கலைஞர் @Udhaystalin னை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்.
நேற்று அறிக்கை விட்டது போல கடும் நடவடிக்கை எடுப்பாரா @mkstalin ?
"ஊருக்குதான் உபதேசம், மகனுக்கு மட்டும் தோரணம்"@CMOTamilNadu@chennaipolice_#திமுக_பேனர் pic.twitter.com/XhAA491NuV
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 14, 2019