புதிய மோட்டார் வாகன சட்டம்: கடுமையாகும் தண்டனைகள்!
மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த உள்ள நிலையில் இந்த சட்டத்தின்படி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தெரியவந்துள்ளது
குறிப்பாக வாகன ஓட்டிகள் சாலையில் செய்யும் சிறு தவறுகளுக்கு இதுவரை ரூ.100 ச்செலுத்தி வந்த நிலையில் இனிய ரூபாய் 500 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல் ஓட்டுனர் உரிமை இன்றி வாகனம் ஓட்டினால் இதுவரை ரூபாய் 500 அபராதமாக இருந்து வந்த நிலையில் இனி ரூ.5000 அபராதமாக செலுத்த வேண்டும்
மேலும் வேகமாக வாகனம் ஓட்டும் குற்றமிழைத்தவர்களுக்கு இதுவரை ரூபாய் 400 மட்டுமே அபராதமாக பெற்று வந்த நிலையில் இனி 1,000 முதல் 2,000 ரூபாயை அபராதமாக பெறப்படும் என்றும் ஆபத்தான வகையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் இதுவரை ரூபாய் 2000 மட்டுமே அபராதம் பெற்று வந்த நிலையில் இனி ரூபாய் 5000 அபராதம் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனி ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், சீட் பெல்ட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இனி ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் பெர்மிட் இல்லாத வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், காப்பீடு இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு ரூபாய் 2000 அபராதமும், இரண்டு சக்கர வாகனத்தில் கூடுதல் சுவையுடன் வாகனம் ஓட்டுவோருக்கு ரூபாய் 2000 அபராதமும், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் 3 ஆண்டு சிறை என்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என புதிய வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வாகன சட்டத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்