‘மங்காத்தா 2’ படத்தை எடுக்க விடமாட்டேன்: பிரபல நடிகர்
சமீபத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்தை நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு, விரைவில் அஜித் படத்தை இயக்குவேன் என்று கூறினார்.
இதனையடுத்து ‘மங்காத்தா 2’ படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியை வெங்கட்பிரபுவும் மறுக்கவில்லை
இந்த நிலையில் மங்காத்தா 2 படத்தை எடுக்க விடமாட்டேன் என நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தெரிவித்துள்ளார். மங்காத்தா படத்தில் என்னுடைய கேரக்டர் இறந்துவிடும்படி இருக்கும். எனவே மங்காத்தா 2 படம் எடுத்தால் அதில் என்னால் நடிக்க முடியாது. எனவே ‘மங்காத்தா 2’ படத்திற்கு பதிலாக வேறொரு கதையை எடுக்கும்படி என் அண்ணனிடம் கூறுவேன். அப்போதுதான் நான் அந்த படத்தில் நடிக்க முடியும் என்று கூறினார்