யோகிபாபுவின் காக்டெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடத்தில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்றான ’காக்டெயில்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படம் வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. 4 திருமணமான நபர்கள் ஒரு காட்டுக்குள் சுற்றுலா சென்று அங்கு ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சாய்பாஸ்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசை இந்த படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது