ராஜீவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி?

ராஜீவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி?

ராஜீவ் மேனன் சமீபத்தில் இயக்கிய ‘சர்வம் தாளமயம்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதையை கேட்ட ஜெயம் ரவி உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்

நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கவுள்ள பிரமாண்டமான படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஸ்க்ரீன்சீன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் , ‘என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அகமது இயக்கவிருக்கும் ஒரு படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்

Leave a Reply