ஃபனி புயல் எதிரொலி: ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளதை அடுத்து இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்துள்ளது
இந்த நிலையில் ஃபனி புயல் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்வு முகமை உறுதி செய்துள்ளது.
ஒடிஷாவில் நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது