ஃபனி புயல் திசை மாறியதால் குணா குகை தடை நீக்கம்

ஃபனி புயல் திசை மாறியதால் குணா குகை தடை நீக்கம்

தமிழகத்தில் ஃபனி புயல் காரணமாக விட‌ப்ப‌ட்டிருந்த ரெட் அல‌ர்ட் கார‌ண‌மாக‌ கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ முக்கிய‌ சுற்றுலா த‌ல‌ங்க‌ளான மோய‌ர் ச‌துக்க‌ம் , பேரிஜ‌ம் , குணா குகை ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 29 ம‌ற்றும் 30-ம் தேதிகளில் செல்ல‌ வ‌ன‌த்துறை த‌டை விதித்திருந்தது. புயல் நேரத்தில் இந்த பகுதிகளில் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் ஃபனி புயல் தற்போது திசை மாறி வங்கதேசம் பக்கம் சென்றுவிட்டதால் குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறை நீக்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply