ஃபானி புயல்: இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு ஐநா பாராட்டு
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஃபானி புயலை துல்லியமாக கணித்து அரசுக்கு உதவியதாகவும் ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே ஒடிஷாவில் புயல் வந்தபோது சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகினர். ஆனால் நேற்று கரையை கடந்த ஃபானி புயலால் மிகக்குறைந்த அளவே பலியாகியுள்ளனர். இதுவரை வெளிவந்த தகவலின்படி 8 பேர் பலியாகியுள்ளனர். இவர்களும் அரசின் எச்சரிக்கையை மீறி புயல் கரையை கடக்கும்போது வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே சிறப்பான முன்னேச்சரிக்கை மற்றும் துரித நடவடிக்கை எடுத்த இந்திய வானிலை மையம், இந்திய அரசுக்கு ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.