இந்தியாவில் நடைபெற உள்ள இண்டெர்நெட்.ஆர்க் அமைப்பின் முதல் மாநாட்டில் பங்கேற்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இந்தியா வருகிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடிய சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் மின்வணிக ஜாம்பவானான ஜெப் பெசோஸ் அவர்களும், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா அவர்களும் இந்தியா வந்ததை அடுத்து தற்போது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அவர்களும் இந்தியா வருவது இணைய உலகில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகிறது. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்களும் சமீபத்தில் இந்தியா வந்து ஆண்ட்ராய்ட் ஒன் போன் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் நிலையில் இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பர்க், அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியா வருகிறார். புதுடெல்லியில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடக்கவுள்ள இன்டெர்நெட்.ஆர்க் அமைப்பின் முதல் மாநாடில் மார்க் ஜூக்கர்பர்க் பங்கேற்பதற்கிறார். அதன்பின்னர் அவர் ஃபேஸ்புக்கில் மிகவும் ஈடுபாடுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
பேஸ்புக்கின் நிறுவனத்தில் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் 100 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது.ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இந்தியா வருகை புரிந்ததும் குறிப்பிடத்தக்கது.