அக்காவை திருமணம் செய்து தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்: இரட்டையர்களால் குழப்பம்
தென்னாப்பிரிக்கா நாட்டில் பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒரு இரட்டை சகோதரர்களுக்கு அவர்களை போலவே இரட்டையர்களாக பிறந்த சகோதரிகளுடன் திருமணம் நடைபெற்றது
முதலிரவு உள்பட அனைத்து சடங்குகளும் முடிந்து சந்தோஷமாக ஒரே வீட்டில் தம்பதிகள் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் சகோதரிகளில் ஒருவர் கர்ப்பம் அடைந்தார்.
இதனையடுத்து இத்தனை நாட்களும் அக்காவுக்கு மோதிரம் மாற்றிவிட்டு தங்கையுடன் ஒரு சகோதரர் குடும்பம் நடத்தியதும், அதேபோல் தங்கைக்கு மோதிரம் மாற்றிவிட்டு அக்காவுடன் குடித்தனம் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் இரண்டு தம்பதிகளுமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கர்ப்பம் அடைந்த பெண் சில நாட்களாக அதிர்ச்சியில் இருந்து மீளமே இல்லை என தெரிகிறது. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று தெரியாமல் அப்பகுதி பெரியவர்களே குழப்பத்தில் உள்ளனர்