சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளிவராது என்று கூறப்படுகிறது
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இன்னும் சமரசம் ஏற்படவில்லை என்றும் அதனால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை என்றும் இருவரும் முரண்டு பிடிப்பதால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன