அசுரன் திரைவிமர்சனம்: அசுரத்தனமான நடிப்பு

அசுரன் திரைவிமர்சனம்: அசுரத்தனமான நடிப்பு

தனுஷின் அசுரன் திரைப்படம் வேற லெவல் என்று சொல்லும் அளவுக்கு தனுஷ் உள்பட அனைவரின் அசுரத்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது

தனுஷ் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகிய இரண்டு குடும்பத்திற்கு இடையே ஒரு இடம் பிரச்சனை வருகிறது. இதனால் ஏற்பட்ட பகையில் ஆடுகளம் நரேனை தனுஷின் மூத்த மகன் அவமானப்படுத்த, இதனால் ஆத்திரம் அடையும் ஆடுகளம் நரேன், தனுஷின் மூத்த மகனை கொன்று விடுகிறார். இதனால் தனுஷின் குடும்பமே நொறுங்கிவிட, அம்மா, அப்பாவின் சோகத்தை பார்க்க முடியாமல், தனுஷின் இளைய மகன் ஆடுகளம் நரேனை கொலை செய்துவிடுகிறார். அதன்பின்னர் இருதரப்பிலும் நடக்கும் பழிவாங்கல்கள், இழப்புகள், அவமானங்கள், தனது குடும்பத்தை காப்பாற்ற தனுஷ் எடுக்கும் அதிகபட்ச முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை

தனுஷின் நடிப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் அவருக்கு இன்னொரு தேசிய விருது உறுதி.

மஞ்சுவாரியரின் நடிப்பை முதல் முறையாக பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைவார்கள். இவர் தமிழில் முழுநேரம் நடிகையானால், பல முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிவிடுவார்

பசுபதியின் இயல்பான நடிப்பு, ஆடுகளம் நரேனின் கெளரவம், கருணாஸ் மகனிடம் இயக்குனர் வாங்கிய வேலை, என படம் முழுவதும் சினிமாத்தனம் கொஞ்சமும் இல்லாமல் நகர்கிறது

ஜிவி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு, ராமரின் படத்தொகுப்பு கச்சிதம்

நாம எல்லோரும் ஒரே மொழி பேசுறோம், ஒரே நாட்டில் வாழுறோம், ஒண்ணா இருக்க முடியாதா? என்று தனுஷ் கிளைமாக்ஸில் பேசும் வசனம் தான் இந்த படத்தின் உயிர் நாடி. மேலும் நம்மகிட்ட இருக்குற சொத்தை பறித்து விடலாம், நிலத்தை பறிக்கலாம், பணத்தை பறிக்கலாம் ஆனால் படிப்பை யாராலும் பறிக்க முடியாது. நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி, அவங்க செஞ்ச தப்பை செய்யாதே’ என்ற வசனம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்கும் வகையில் உள்ளது

மொத்ததில் தனுஷுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் இந்த அசுரன்

ரேட்டிங் 4/5

Leave a Reply