’அசுரன்’ படத்தை பாராட்டியதால் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை நேற்றிரவு தூத்துகுடியில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த படத்திற்கும், தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: அசுரன் – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் பாராட்டுகள்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்டாலினின் இந்த டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது: பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!
இதனால் தற்போது முக ஸ்டாலினுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது. முரசொலி அலுவலகத்திற்காக பஞ்சமி நிலங்கள் வளைக்கப்பட்டதா? டாக்டர் ராம்தாஸ் சொல்வது உண்மையா? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்