அஜித்தின் அரசியல் கொள்கையை பின்பற்றிய மோகன்லால்
சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்ததால், அக்கட்சிக்கு அஜித்தின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டு தான் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அஜித்தை போலவே மலையாள நடிகர் மோகன்லாலும் தற்போது தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிபடுத்தியுள்ளார். பாஜக உள்பட எந்த கட்சியிலும் தான் இணையப்போவதில்லை என்றும் தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மோகன்லால் அரசியலில் நுழையவுள்ளதாக செய்திகள் வெளியானபோது அவருடைய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.