அஜித் ஊரை சேர்ந்த இரண்டு பெண்களை அடித்து விரட்டி பொதுமக்கள்
பேரு தூக்குதுரை, ஊரு கொடுவிலார்பட்டி ஒத்தைக்கு ஒத்தை வாடா’ என அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் ஒரு வசனம் வரும். அந்த கொடுவிலார்பட்டியில் இரண்டு பெண்கள் இன்று ஊர்ப்பொதுமக்களால் அடித்துவிரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த சுகந்தி என்ற இளம்பெண் டிக்டாக்கில் ஆபாச பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்து வந்த நிலையில் சுகந்திக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் கிடைத்ததாகவும் அவர்களுடன் சுகந்தி சகஜமாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுகந்தியுடன் பழகிய ஒரு இளைஞருக்கும் சுகந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அந்த இளைஞர் டிக் டாக் வீடியோவில் அதில் சுகந்தியை மட்டுமன்றி கொடுவிலார்புரம் கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களையும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த கொடுவிலார்புரம் கிராம மக்கள் சுகந்தி மற்றும் அவருடைய சகோதரியை ஊரில் இருந்து நிரந்தரமாக அடித்து விரட்டினார் இனிமேல் ஊருக்குள் அவர்கள் இருவரும் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளனர் மேலும் இதுகுறித்து காவல்துறையினர் புகார் அளித்த கொடுவிலார்புரம் மக்கள், டிக்டாக் வீடியோவை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தின