67 வயது தீவிர ரசிகரின் வீடியோ
அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதும் அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களும் என்பதும் தெரிந்ததே
ஆனால் 67 வயதில் ஒருவர் அஜித்தின் மிக தீவிர ரசிகர் என்றும் அஜித் கடவுளின் தூதர் என்றும் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
பூவரசன் பீப்பி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 67 வயது தீவிர அஜித் ரசிகரான ஒருவர், ‘தான் அஜித் படங்களை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் அவர் தானாகவே கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர் கூறியுள்ளார்
மேலும் கடவுளை நேரில் வந்து யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்றும் மனிதர் மூலம் தான் உதவி செய்வார் என்றும் அவ்வாறு உதவி செய்பவர்களில் அஜித்தும் ஒருவர் என்றும் அவர் கூறினார்
மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அஜித் குறித்து அவர் கூறிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இவர் சென்னை நந்தனத்தில் சேர்ந்த ஜான் மைக்கேல் என்பது குறிப்பிடத்தக்கது
I met this gentleman today near Starbucks, Nandanam. He is John Michael, an ardent fan of Thala Ajith Kumar. He wanted me to record him while we were having a casual conversation and added that he is already quite popular on YouTube. His love for Thala, the language English… pic.twitter.com/CMeHfwvzpD
— Halitha (@halithashameem) August 14, 2020