அஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி
சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர்கள் நடிகர் அஜித்தை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்டு தக்சா என்ற குழுவை ஏற்படுத்தி உலக அளவில் பரிசுகள் பெற்ற நிலையில் தற்போது இந்த மாணவர் குழு இந்தியாவில் முதல்முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்துள்ளது
ஏற்கனவே இந்த குழு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை தயாரித்து அதனை சென்னை முதல் வேலூர் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உடல் உறுப்புதானத்துக்கு உதவும் வகையில் தயாரித்துள்ள நிலையில் தற்போது அதே பாணியில் 80 கிலோ எடை கொண்ட மனிதர்களை தூக்கிச்செல்லும் திறனுடன் கூடிய, 20 கிலோ மீட்டர் சுற்றளவில் எளிதாக பறந்து செல்லும் ஏர் டாக்சி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த ஏர் டாக்சியின், பாகங்களை ஒருங்கிணைத்து பரிசோதித்து வெற்றிகரமாக வானில் பறக்கும் சோதனையும் முடிந்துவிட்டது.