அஜித், சிவகார்த்திகேயன் இணைந்த படம்

அஜித், சிவகார்த்திகேயன் இணைந்த படம்

அஜித் நடித்த ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஒரு அரிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஏகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காமெடி வேடம் ஒன்றில் நடித்துள்ளதாக அந்த படத்தில் பணிபுரிந்த ஒருவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் அந்த காட்சியின் அரிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த காட்சியில் இளவயது சிவகார்த்திகேயன் கைநிறைய புத்தகங்களுடன் அஜித் முன் நிற்பது போன்று உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் இந்த காட்சி ஒரு காமெடி காட்சி படமாக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த காட்சி ஒரு சில காரணங்களால் படத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply