அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கம்: அந்தமான் தீவில் பரபரப்பு
அந்தமான் தீவுகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் காரணமாக அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆயினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பது ஒரு ஆறுதல்
அந்தமான் தீவில் நேற்று மாலை 6.19 மணி அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ள நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதாவது இரவு 8.05 மணிக்கு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
முன்னதாக, அருணாச்சல பிரதசே மாநிலத்தில் நேற்று மாலை 5.48 மணிக்கு நிலநடுகக்கம் ஏற்பட்டது. டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகிஉள்ளது.
இந்த நிலநடுக்கங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் தெரியவரவில்லை.