அடுத்த அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் உண்டு: மாஃபா பாண்டியராஜன்

அடுத்த அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் உண்டு: மாஃபா பாண்டியராஜன்

அடுத்தக்கட்ட மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு நிச்சயம் இடம் இருக்கும் என தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை, பிரதிநிதித்துவம் உறுதியாக கிடைக்கும் என்றும், அதிமுகவை சேர்ந்த 2 பேர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு என நம்பிக்கை இருக்கிறது என்றும் மாஃபா பாண்டியராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதியின் எம்பியுமான ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம் இருவரில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது

Leave a Reply