அடுத்த ஆண்டு முதல் 1-6 வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வி: அரசு அதிரடி அறிவிப்பு
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை தெலுங்கு அல்லது உருது மொழி ஆகிய இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்று கட்டாய பாடமாக்கப்படுவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
தாய்மொழி மற்றும் ஆங்கிலம் இவை இரண்டு ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முறை கொண்டு வரப்படுவதாகவும் ஆந்திர அரசு விளக்கம் அளித்துள்ளது