அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 26 கோடி ஸ்மார்ட்போன் விற்பனையாகும். அசோசேம் கணிப்பு

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 26 கோடி ஸ்மார்ட்போன் விற்பனையாகும். அசோசேம் கணிப்பு

smart phoneஇந்தியாவில் இந்த நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை மிக அதிகளவில் இருக்கும் என்று அசோசேம் என்ற அமைப்பு கணித்துள்ளது. இந்தியாவில் அடுத்த நிதி ஆண்டில் 16 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாக வாய்ப்பு இருக்கின்றது என்றும் அதே சமயத்தில் நடப்பு நிதியாண்டு ஆண்டில் 10 கோடிக்கு மேல் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துவருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும், பேசிக் மொபைல் போன் வைத்திருப்பவர்களில் 50%க்கும் மேல் அடுத்த நிதியாண்டில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் சூழ்நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் 4.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த விற்பனை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

மேலும் பல வாடிக்கையாளர்கள் கேமரா உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்குவற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஸ்மார்ட்போன் விற்பனை அதிகமாக இருப்பதன் காரணமாக டிஜிட்டல் கேமிரா விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 35 சதவீதம் சரிந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் அதிகம் விற்பனையாகி வருவதாகவும் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 4,000 ரூபாய் முதல் ரூ.10,000 வரை உள்ள ஸ்மார்ட்போன்களின் பங்கு 78% என்றும் அமைப்பு மேலும் கூறியுள்ளது.

அதேபோல் டெஸ்ட் டாப் கம்ப்யூட்டர் விற்பனை பெருமளவு குறைந்து வருவதாகவும் அதற்கு பதிலாக டேப்லெட் விற் பனை 75% உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ள அசோசேம், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் இணையம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply