அடுத்த படத்திற்கு ரெடி ஆனார் சேரன் !
2015 ஆம் ஆண்டு வெளியான ‘ ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்கை ‘ என்ற படத்தை இயக்கிய சேரன் அதற்கடுத்து 4 ஆண்டுகளாக படம் ஏதும் இயக்கவில்லை. தற்போது ‘திருமணம்’ என்னும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் அவர் மற்றொரு படத்தை நடிப்பதற்கு கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கு ‘ராஜாவிற்கு செக்’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் படத்திற்கு பிறகு இன்னொரு படமும் தயார் என்று சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பொற்காலம் , பொக்கிஷம் , ஆட்டோகிராப் போன்ற பல படங்களில் சேரன் இயக்குனராகவும் அவரே ஹீரோவாகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் இந்த படத்தை எஸ் .ராஜ்குமார் இயக்குகிறார். சேரன் ஹீரோவாக மட்டும் நடிக்கிறார்.
எஸ் .ராஜ்குமார் இயக்கம் இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக ஸ்ருஸ்தி டாங்கே உள்ளார். எம்.எஸ்.பிரபு இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக உள்ளார். ஏ.ஜான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.