“அடுத்த வாரம் முதல் சட்ட பல்கலைக்கழக வகுப்புகள் தொடங்கப்படும்”

“அடுத்த வாரம் முதல் சட்ட பல்கலைக்கழக வகுப்புகள் தொடங்கப்படும்”

law_universityசட்ட பல்கலைக்கழத்தின் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் துணை வேந்தர் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த வழக்குரைஞர் விமல்ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 1,740 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பல்கலைக்கழகத்தில் போதிய ஆசிரியர், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் அனைத்து பாடப்பிரிவுக்கும் சேர்த்து 31 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.சட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களை கெளரவ விரிவுரையாளராக நியமித்து இளங்கலை சட்ட படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.மாணவர்களுக்கான விடுதி கட்டட பணிகளும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 8-இல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை மனுவினை மாணவர்கள் சார்பில் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர். மாணவர்கள் அறிவிப்பை அடுத்து, பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளையும் கால வரையறையின்றி மூடுவதாக உத்தரவிடபட்டது.பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையால் மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

மேலும் பல்கலைக்கழகத்தில் அனைத்து அடிப்படை வசதிளையும் ஏற்படுத்தி தருவதற்கு தமிழக அரசுக்கும், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பதிவாளருக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போரட்டத்தை கைவிட்டுள்ளனர்.

ஆகையால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டதால், கால வரையறையின்றி வகுப்புகளை மூடப்படும் என்ற உத்தரவைத் திரும்ப பெறுவதாகவும், செவ்வாய் கிழமை முதல்(ஆகஸ்ட் 16) வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்று உறுதியளித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:மாணவர்கள் தங்குவதற்கு கட்டப்படும் விடுதியின் கட்டட பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை.ஆகையால், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், சட்ட பல்கலைக்கழக இயக்குனர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

அடுத்த வாரம் முதல் வகுப்புகள் இயங்கும் என்ற பல்கலைக்கழக நிர்வாக உத்தரவை ஏற்கிறோம்.பேராசிரியர் பற்றாக்குறை விவகாரத்தில், 3 வாரத்தில் பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை செப்டம்பர் 9- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply