அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியாக குமரி பகுதியில் நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 தினங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்பதால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.