அட்லியின் சம்பளத்தில் ஒரு படத்தையே முடித்த லோகேஷ் கனகராஜ்!
ஒரு இயக்குனர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த இயக்குனர் இயக்கும் திரைப்படத்தால் அதன் தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை என்றால் அவருடைய திறமைக்கு அர்த்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலும் ஷங்கர் படம் இயக்கிய படங்கள் பிரம்மாண்டமாகவும் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூலைக் குவித்தாலும், அவரை வைத்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் மீண்டும் ஷங்கரின் இயக்கத்தில் படம் தயாரிக்க யோசிப்பார்கள். அந்த அளவுக்கு அவர் பெரிய பட்ஜெட்டில் தேவையில்லாத செலவுகளை செய்துவிடுவார் என்பதுதான் உண்மை. ஷங்கரின் படத்தை தயாரித்த ஏவிஎம், ஏ.எம்.ரத்னம், விஜய் அமிர்தராஜ், சன் பிக்சர்ஸ், போன்ற நிறுவனங்கள் மீண்டும் ஷங்கர் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கரே இப்படி இருக்கும்போது அவர் வழி வந்த அட்லியும் அதேபோல் தானே இருப்பார். கதையை நம்பாமல் முழுக்க முழுக்க பிரமாண்டத்தையும் ஸ்டார் வேல்யூவையும் நம்பி அவர் எடுக்கும் திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலைக் குவித்தாலும் தயாரிப்பாளருக்கு எந்த லாபமும் கிடைக்காமல் உள்ளது என்பதுதான் உண்மையான நிலை
குறிப்பாக மெர்சல் திரைப்படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த போதிலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் இன்று எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பிகில் திரைப்படமும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தாலும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை என்பதுதான் உண்மையான நிலை ஆகும்
இந்த நிலையில் பிகில் திரைப்படத்திற்கு அட்லியின் சம்பளம் மட்டும் ரூபாய் 25 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆனால் பிகில் திரைப்படத்துடன் வெளிவந்த லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.25 கோடி தான். அட்லியின் சம்பளத்தில் ஒரு படத்தை தயாரித்து அந்த படத்தை வெற்றிப் படமாக்கியது லோகேஷ் கனகராஜ் திறமைசாலியான இயக்குனரா? அல்லது 180 கோடி செலவில் பிரமாண்டம் என்ற பெயரில் ஒரு சுமாரான படத்தை எடுத்த அட்லீ திறமையான இயக்குனரா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்