அணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை: வடகொரியா திட்டம்
வடகொரியா அணு ஆயுதங்களை சோதனை செய்து வருவதாக அமெரிக்கா உள்பட உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது அணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை சோதனை செய்யவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவின் வெளியுறவுத்துறை ஆமைச்சர் ரியோங் ஹோ சமீபத்தில் கூறுகையில் பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை செய்ய வடகொரியா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த தகவலை வடகொரியாவின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது