அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி:

அதிர்ச்சி தகவல்

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது

இதுகுறித்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டரில் கூறியதாவது: எனக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவ் வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தின் என்னுடன் தொடர்புகொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்;’ என்று பதிவிட்டுள்ளார்

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆளும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், உத்தர பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எட்டியூரப்பாவுக்கு கொரோனா, கர்நாடகா, பாஜக

Leave a Reply