அண்ணாவும் கலைஞரும் முதல் பன்னாடைகள்: நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி அவ்வப்போது தைரியமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருவது தெரிந்ததே. இதனால் அவரை நெட்டிசன்கள் சிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்வதுண்டு. இருப்பினும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கஸ்தூரி தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்
இந்த நிலையில் இன்றும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார்.
பெரியாரின் வயதுக்கு ஒவ்வாத செயல்களை விமர்சிப்பது பன்னாடைத்தனம் எனில், அறிஞர் அண்ணாவும் கலைஞரும் முதல் பன்னாடைகள். அவர்களை பின்பற்றுவதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? என்று ஒரு டுவீட்டிலும், பெரியார் வழியில் தான் சிறுமியை காமகொடுமை செய்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் சென்று உள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் மகள் போன்றவரை பெண்டாளலாம் என்பது பெரியார் காட்டிய வழித்தானே’ என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.