அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: சென்னை மாநகராட்சி விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைமை திட்டமிட்டது. இதற்காக சென்னை மாநகராட்சியில் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் சென்னை மாநகராட்சி நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தற்போது அளித்துள்ளது.
அண்ணா சாலையில் எதிர் காலத்தில் சாலை விரிவாக்கம் செய்ய இடம் தேவைப்பட்டால் ‘சிலை அகற்றபடும்’ என்ற நிபந்தனையை விதித்தது. இந்த நிபந்தனையை திமுக ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து அடுத்த மாதம் 2வது வாரத்தில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி உள்பட பல தேசிய தலைவர்களும், தமிழக தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.