‘அண்ணா’ என்று என்னை கூப்பிடுவதா? கவின் ஆதங்கம்
பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை லாஸ்லியா ‘அண்ணா’ என்று சொல்லிவிட்டதால் அவர் ஆதங்கப்பட்ட காட்சி சுவாரஸ்யமாக இருந்தது.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, கவினை ‘அண்ணா’ என்று அழைத்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்த கவின், ‘என்னை போய் எப்படி அண்ணா என்று கூப்பிடலாம் என்று கூறி லாஸ்லியாவின் வாட்டர் பாட்டிலை எடுத்து வைத்து கொண்டு வம்பு செய்தார்.
மேலும் இன்று இரவுக்குள் என்னிடம் இருந்து இந்த வாட்டர் பாட்டிலை நீ வாங்கிவிட்டால் உன்னை நான் தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூற லாஸ்லியா இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல், ‘இனிமேல் அண்ணா’ என்று கூப்பிட மாட்டேன்’ என கவினிடம் சரண் அடைந்தார்.