அதிக அபராதம் ஏன்? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

அதிக அபராதம் ஏன்? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மிக அதிகமான அபராதத்தொகை விதிக்கப்படுகிறது. சில சமயம் வாகனத்தின் விலையை விட அபராதத்தொகை அதிகமாக உள்ளது

இந்த நிலையில் அதிக அபராதம் ஏன்? என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். அனைவரும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுவதாகவும், அனைவரும் விதிகளை பின்பற்றி அபராதம் என்பதே இல்லை என்ற நிலை வர வேண்டும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ரூ.100, ரூ.200 என்றால் வாகன ஓட்டிகள் மெத்தனமாக வேண்டுமென்றே விதிகளை மீறுவதாகவும் அதிக அபராதம் என்றால் அனைவரும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்களும் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply