அதிசயம் ஆனால் உண்மை. டிராபிக்கில் சிக்கிய தமிழக முதல்வர்

அதிசயம் ஆனால் உண்மை. டிராபிக்கில் சிக்கிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் சரி வீட்டில் இருந்து கிளம்பும்போதே அனைத்து பகுதிகளிலும் டிராஃபிக்கை மூடுவது போலீசாரின் வழக்கமாக இருந்த நிலையில் தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் டிராபிக்கில் சிக்கியுள்ளார் என்பதை தமிழக மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

ஆம், நேற்று முன்தினம் சென்னை சார்மியர் சாலையில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் கான்வாய் மக்களுடன் மக்களாகவே சென்றுள்ளது. ஏற்கெனவே புயலால் டிராஃபிக் விளக்குகள் சேதமடைந்து விட, முதல்வரின் காரும் டிராஃபிக்கில் சிக்கியுள்ளது. சார்மியர்ஸ் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் முதல்வரின் கான்வாய் நின்றுள்ளது. பின்னர் போலீசார் முதல்வர் கான்வாய் செல்ல வழி ஏற்படுத்தித் தந்துள்ளனர். தொடர்ந்து முதல்வரின் கான்வாய் பயணத்தை தொடங்கியுள்ளது.

டீக்கடை நடத்தி படிப்படியாக உயர்ந்து முதல்வராகியுள்ள பன்னீர்செல்வம், அடித்தட்டு மக்களின் கஷ்டத்தை புரிந்தவர் மட்டுமின்றி அனுபவமும் பெற்றுள்ளதால் மக்களுடன் மக்களாக எளிமையாக வலம் வருகிறார். அவரது இந்த எளிமையே அவர் நல்லாட்சி செய்வார் என்ற எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply