அதிபர் பதவி விலகிய ஒபாமாவுக்கு ரூ.400 கோடி சம்பளம் வழங்கிய நிறுவனம்
அமெரிக்க அதிபராக கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்த ஒபாமா, இந்த எட்டு ஆண்டுகளுக்கு சேர்த்து பெறாத மிகப்பெரிய தொகையை தற்போது பெற்றுள்ளார்.
அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தனது குடும்பத்தினர்களுடன் அமைதியாக வாழ்ந்து வரும் ஒபாமாவை ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதற்காக ஒபாமாவுக்கு சுமார் 60 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 400 கோடி ) சம்பளமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2004ல் பில் கிளிண்டன் வாழ்க்கை வரலாறு புத்தகத்திற்காக $15 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர்களில் மிகப்பெரிய தொகையை வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பெற்றவர் என்ற பெருமையை ஒபாமா பெறுகிறார்.