அதிமுகவில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான ரவிமரியா நேற்று அமைச்சர் ஜெயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நடிகர் ரவிமரியா அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஜெயவர்தன் எம்பி, ஆவடி குமார், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுகவில் இணைந்துள்ள ரவிமரியா அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கட்சியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.