அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான தாமரைக்கனியின் மகனும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இன்று இணைந்தார்.
அவர் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அமமுக கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுகவில் இணைந்த பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த இன்பத்தமிழன் அவரிடம் ஆசி பெற்றார்.