அதிமுகவுடன் அமமுக இணையுமா? டிடிவி தினகரன் விளக்கம்
அதிமுகவுடன் அமமுக இணைய வேண்டும் என்றும், ஒன்றிணைந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அவ்வாறு கூட்டணி வைத்தால் தேர்தலுக்கு பின் தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் நேற்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்த கருத்துக்கு இன்று பதிலளித்த டிடிவி தினகரன், அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எனது வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாகவும், மதவாத சக்திகளுடன் இணையாமல் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பாக அமமுக இருக்கும் என்றும் தினகரன் தெரிவித்தார்.