அதிமுகவை அழிக்கும் நோக்கில் ஓ.பி.எஸ்: டிடிவி தினகரன்

அதிமுகவை அழிக்கும் நோக்கில் ஓ.பி.எஸ்: டிடிவி தினகரன்

அதிமுகவை அழிக்கும் நோக்கில் ஓ.பி.எஸ் செயல்படுவதாக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், கட்சியை அழிக்கும் நோக்கில் பி.எச்.பாண்டியன் செயல்பட்டதாகவும், அதேபோன்று தற்போது ஓ.பி.எஸ் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னால் முதலமைச்சராக தொடர முடியாத வருத்தத்தில், இதுபோன்ற செயல்களில் ஓ.பி.எஸ் ஈடுபடுவதாக டிடிவி தினகரம் கூறினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின், முதலமைச்சராக ஓ.பி.எஸ் பதவியேற்றார். இதையடுத்த சில நாட்களில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து சில நாட்களில் ஓ.பி.எஸ், சசிகலா என கட்சி இரண்டாக பிரிந்தது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததை அடுத்து, சட்டமன்ற கட்சி தலைவராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை பழனிச்சாமி தக்கவைத்துக் கொண்டார்.

Leave a Reply