அதிமுக கூட்டணிக்கு வருகிறதா விசிக மற்றும் கம்யூனிஸ்ட்?

அதிமுக கூட்டணிக்கு வருகிறதா விசிக மற்றும் கம்யூனிஸ்ட்?

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக மற்றும் திமுக தீவிரமாக நடத்தி வருகின்றன. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளன. மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் இணைய வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ‘பொதுவாக தான் பேசியதாகவும் ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல தானாக கருத்து தெரிவிப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply