அதிமுக கூட்டணியில் விருப்பமனு இன்றுடன் நிறைவு!

அதிமுக கூட்டணியில் போட்டியிட விருப்பப்படுபவர்கள் விருப்பமனு இன்றுடன் முடிவடைகிறது ஏற்கனவே மார்ச் 5 வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மார்ச் 3ம் தேதிக்குள் விருப்ப மனு தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது

கடந்த 7 நாட்களில் இதுவரை 7 ஆயிரத்து 500 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று நிறைவு நாள் என்பதால் அதிகமான விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்பது என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விருப்ப மனு மீதான நேர்காணல் நாளை ஒரே கட்டமாக நடந்து விடும் என்றும் நாளையே அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply