அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்; சுறுசுறுப்பாகிறது தேர்தல் களம்
மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சுயேட்சைகள் மட்டுமே வேட்புமனு செய்து வந்த நிலையில் இன்று அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சுறுசுறுப்பாகியுள்ளது
கடந்த 3 நாட்களில் மக்களவை தேர்தலுக்கு 48 பேரும், சட்டமன்ற இடைத்தேலில் போட்டியிட 8 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று அதிக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளர்கள் இன்று காலை 11.30 மணியில் இருந்து 12 மணிக்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தி இருப்பதாகவும், அதே போல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, பாமக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே கெடு உள்ளதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது