அதிமுக – திமுக மறைமுக கூட்டுச் சதி: தினகரன் குற்றச்சாட்டு

அதிமுக – திமுக மறைமுக கூட்டுச் சதி: தினகரன் குற்றச்சாட்டு

திமுக தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு, ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அதிமுகவும், திமுகவும் வரவேற்றுள்ளதை வைத்து பார்க்கும்போது இரு கட்சிகளும் மறைமுக கூட்டுச்சதி செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயாலாளர் டிடிவி தினகரன் குற்றாஞ்சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து மேலும் கூறியதாவது: திருவாரூர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து விடுவோம் என்ற பயத்தில், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினர்களும் மறைமுகமாக கூட்டுச் சேர்ந்து, தேர்தலை நிறுத்தி விட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை.

எனவே டெபாசிட் இழந்து விடுவோம் என்று ஆளுங்கட்சி அச்சம் ஏற்பட்டுள்ளது. தனது தந்தையின் தொகுதியில் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். கூட்டுறவு சங்க பதவிகளில் 60:40 என அதிமுக மற்றும் திமுக மறைமுக புரிந்துணர்வில் செயல்பட்டு வருகின்றன.

திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியிடம் இருந்து ஒப்பந்தங்கள் பெற்று வருகின்றனர். எனவே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதற்கு இரு கட்சிகளும் தான் காரணம். தேர்தல் மட்டும் நடந்திருந்தால், அமமுகவிற்கு பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் என்று கூறினார்

 

Leave a Reply