அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேமுதிக 41 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் அதன்பின்னர் 23 தொகுதிகளுக்கு இறங்கிவந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
ஆனால் அதிமுக தரப்பில் இருந்து அதிகபட்சம் 15 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கூறப்பட்டிருப்பதால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது
இருப்பினும் ஒரு ராஜ்யசபா தொகுதி தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக தீவிர முயற்சியில் உள்ளது