அதிமுக தொகுதி பட்டியல் இன்று வெளியீடு: கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், உள்பட ஒருசில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு கிரவுன் பிளாசா ஒட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தொகுதி பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
இதனையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜன், சுதீஷ், ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்று கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு வருகை தர வாய்ப்பு உள்ளது