நேற்று அதிமுகவின் 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி நிலையில் இந்த வேட்பாளர் பட்டியல் குறித்து ஒரு சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்
அந்த வகையில் தற்போது சாத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ராஜவர்மன் என்பவரும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி உள்ளார்
அதிமுக வேட்பாளர் பட்டியலில் பாகுபாடு காட்டப்பட்டு உள்ளதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடிய எனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் ராஜேந்திர பாலாஜி என்ற தனி நபருக்காக நான் புறக்கணிக்கப்பட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்
சாத்தூர் தொகுதியில் எம்எல்ஏ ராஜவர்மன் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது